1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk rs bharthi says adhav arjuna is culprit in karur

கரூர் சம்பவத்தில் 2வது குற்றவாளி ஆதவ் அர்ஜுனா!.. ஆர்.எஸ்.பாரதி காட்டம்!...

adhav arjuna
தேர்தலுக்கு 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றபோது அவரை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி பலரும் மயக்கமடைந்தனர். சிலர் அங்கேயே இறந்தும் போனார்கள். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விஜய் தாமதமாக சென்றதே இதற்கு காரணம் என அப்போது திமுக குற்றம் சொன்னது. ஆனால், தவெகவோ இதற்கு பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக நம்புகிறது. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு அந்த கோரிக்கையை ஏற்கப்பட்டு தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது..

இந்த நிலையில்தான் தவெக விழா ஒன்றில் பேசிய அமைச்சர்  ஆதவ் அர்ஜுனா ‘ கரூரில் காவல்துறையை வைத்து திமுக மக்களை கொன்று குவித்தது’ என பேசியிருந்தார். இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளரிடம் கருத்து தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி ‘கரூர் விவகாரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்புவது போல அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார். இது பொறுப்பற்ற பேச்சு.. கரூர் வழக்கில் இரண்டாவது குற்றவாளி ஆதவ் அர்ஜுனாதான். முதவரிடம் கூட விசாரணை நடந்தது.. அமைச்சர் நிர்மல் குமார், முதல்வரின் உதவியாளர் ஜெகதீஷ் ஆகியோரும் கரூர் வழக்கில் குற்றவாளிகள். திமுக ஆட்சியின் போது கரூர் வழக்கை விசாரித்த அதிகாரிகளைத்தான் தற்போது தவெக அரசும் வைத்திருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
ஆணவம் அழிவிற்கு வழி!.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதை கண்டித்த ஸ்டாலின்!...