செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (14:23 IST)

வாய்ப்பை தவற விட்டார் ; இனிமேல் முதல்வராக முடியாது : ஸ்டாலினை வாறிய விஜயகாந்த்

இனிமேல் ஒருபோதும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 
சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
“ஸ்டாலின் தன்னை கருணாநிதியாகவே கற்பனை செய்து கொண்டிருக்கிறார். எனது கொள்கை எப்போதும் ஸ்டாலினுடன் ஒத்துப்போனதில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நான் கருணாநிதியை சந்திக்க விரும்பினே. ஆனால், அதை ஸ்டாலின் திட்டமிட்டு தடுத்தார். அதன்பின்பு, எனக்கு கருணாநிதியை சந்திக்கும் ஆர்வம் போய்விட்டது. 
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க நான் மிகவும் ஆர்வமுடன் இருந்தேன். நாங்கள் 60 இடங்களை கேட்டோம். அவர்களோ 40 தருகிறோம் என்றனர். எங்கள் நிபந்தனைகளுக்கு ஸ்டாலின் ஒப்புக்கொண்டிருந்தால் அவர் இந்நேரம் முதல்வராக இருந்திருப்பார். அவர்கள் பக்கமும் அமைச்சர்கள் இருந்திருப்பார்கள்.  அந்த வாய்ப்பை ஸ்டாலின் தவற விட்டார். இனிமேல் அவர் முதல்வராக முடியாது” என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.