திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 26 ஏப்ரல் 2018 (14:50 IST)

கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில்.....அழகிரி அதிரடி பேட்டி

கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேட்டியில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மு.க.அழகிரி திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, கருணாநிதி உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று கூறினார்.
 
இதையடுத்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் திமுகவில் மீண்டும் இணைவீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் சேருவேன் என்று கூறினார். இவரது இந்த கருத்தால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். ஆனால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சினம் செய்தது குறிப்பிடத்தக்கது.