திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (19:33 IST)

கருணாநிதி மறைவு: தலைவர்கள் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு குறித்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
 
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்: திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும்,  மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பிரதமர் மோடி: இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் திமுக தலைவர் கருனாநிதி. அவரது மறைவை கேட்டு துயரமடைந்தேன்
 
ரஜினிகாந்த்: என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: கருணாநிதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் திமுகவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கருணாநிதியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
 
பாமக ராமதாஸ்: அன்பு நண்பர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும், துயரத்தையும் அளிக்கிறது. கலைஞரின் மறைவு தமிழக அரசியலுக்கும், கலை உலகுக்கும் உண்மையாகவே ஈடு செய்ய முடியாத இழப்பு