ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 4 மே 2022 (17:56 IST)

இலங்கையிலிருந்து தமிழகம் வர முயன்ற 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

Sri Lankan
இலங்கை மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு படகில் வர முயன்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் மற்றும் படகோட்டிகள் இருவர் உட்பட 14 பேரை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக திருகோணமலையை சேர்ந்த 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் என 3 குடும்பத்தை சேர்ந்த 12 நபர்கள் மற்றும் மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் இருவர் ஒரு பைபர் படகில் தனுஷ்கோடி நோக்கி இன்று காலை வந்து கொண்டிருந்தபோது, மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த இலங்கை கடற்படையினர் படகுடன் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரும் முதல் கட்ட விசாரணைக்கு பின் மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மன்னார் காவல் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் இரண்டு படகோட்டிகள் உள்ளிட்ட 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என மன்னார் போலீசார் தெரிவித்துள்ளனர்.