செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (17:29 IST)

இந்தி பேசும் மாநிலங்கள் வளர்ச்சி அடையவே இல்லை: திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன்

dks ilangovan
ஹிந்தி பேசும் மாநிலங்கள் வளர்ச்சி அடையவில்லை என்றும் இந்தி பேசாத மாநிலங்களில் தான் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன என்றும் திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்
 
இந்தி பேசாத மாநிலங்கள் மேற்கு வங்காளம் ஒடிசா ஆந்திரா தெலுங்கானா தமிழகம் கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா குஜராத் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் எல்லாம் மாநிலங்கள் என்றும் இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய பிரதேசம் உத்தரபிரதேசம் பீகார் ராஜஸ்தான் ஆகியவை வளர்ச்சி அடையாமல் இருக்கிறது என்றும் கூறினார் 
 
அப்படி எனில் எதற்காக நான் இந்தி படிக்க வேண்டும் என்றும் நாடு முன்னேற வேண்டுமென்றால் மாநில மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்