செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (16:45 IST)

யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது - மதுரை நீதிமன்றம்

யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை  நிறுத்தி வைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர் கோகுல்ராஜ் ராதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார்.

இதில், ஆத்திர அடைந்த சில அவரை வெட்டி கொன்றனர். மாணவர் கோகுல் ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் கையப்படுத்தி விசாரித்தனர். இதில்,16 பேரை குற்றவாளிகளாக அறிவித்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை வளாகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றம் நடந்தது. இந்த தீர்ப்பில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. மற்ற 6 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென யுவராஜ் உள்ளிட்ட 10 பேர்  நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். எனவே, ஆயுள் தண்டனை ரத்து செய்யக் கோரிய மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.