செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (10:54 IST)

இக்கட்டான சூழலில் எனக்கு கனிமொழி உதவினார்: அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்

இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு கனிமொழி எம்பி உதவி செய்தார் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் இல்லத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட நிலையில் அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் எம்பி கலந்து கொண்டார்.
 
அவர் இந்த விழாவில் பேசிய போது நாடாளுமன்றத்தில் இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் உதவி செய்வார்கள் என்றும் தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அதிக பற்று கொண்டவர் சகோதரி கனிமொழி என்றும் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசியுள்ளார்
 
திமுக எம்பிக்கள் தனக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்வார்கள் என அதிமுக எம்பி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது