ஃபாத்திமா தற்கொலை விவகாரம்; யாரை காப்பாற்ற முயற்சி?? கனிமொழி ஆவேசம்
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை விவகாரத்தில் யாரை காப்பாற்ற முயற்சி நடக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 9 ஆம் தேதி சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த முதலாமாண்டு மாணவி ஃபாத்திமா விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். பேராசிரியரின் தொடர் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.
இது குறித்த விசாரணையை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய உயர்கல்வித் துறையும் விசாரணையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் திமுக எம்.பி.கனிமொழி, ”ஃபாத்திமா தற்கொலை விவகாரத்தில் இது வரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், யாரை காப்பாற்ற முயற்சி நடக்கிறது?” என மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.