1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 மார்ச் 2021 (15:28 IST)

மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக தலைமை அதிரடி உத்தரவு!

அதிமுகவின் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இன்று மாலை சென்னையில் இருக்க வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சட்டமன்ற தொகுதி தேர்தல் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகி உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை அனைத்து மாவட்ட செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது
 
இன்று மாலை அதிமுக கூடும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக விலகியது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் வேட்பாளர் பட்டியல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்தே இந்த அவசர மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இன்று சென்னையில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.