1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (12:38 IST)

ஆளுநர் மாளிகை முற்றுகை ? – திமுக வினர் கைது … சென்னையில் பரபரப்பு…

முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடிப் பழனிச்சாமியை நீக்க வேண்டுமெனெ நீக்க வேண்டும் எனக் கூறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பங்கு இருப்பதாக கடந்த வாரம் வெளியான ஆவணப்படம் ஒன்றில் கூறப்பட்டிருந்தது. தெஹல்கா புலனாய்வுப் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான சாமுவேல் மேத்யூஸ் எடுத்த இந்த ஆவணப்படத்தில் கொடநாடு கொள்ளையில் சம்மந்தப்பட்ட சயான் மற்றும் மனோஜ் இருவரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதனால் கடந்த ஒரு வாரக்காலமாக தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த குற்றச்சாட்டுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக முதல்வர் பழனிசாமி மீது ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை எதிரில் போராடிய ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆளுநர் மாளிகை அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரப்பானது.