புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 ஜனவரி 2019 (16:57 IST)

மானம் மரியாதை எல்லாம் போச்சு.. காசு கேட்டு மேத்யூ மீது வழக்கு தொடர்ந்த எடப்பாடியார்!

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த 5 மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை விவகாரத்திற்கு பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் பரபரப்பு வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். 
 
இந்த வீடியோவில் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாகவும். அங்கு கொள்ளையடிக்க அனுப்பியதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என மனோஜும் சயானும் வாக்குமூலம் அளித்தனர். 
 
ஆனால், இந்த குற்றசாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சயோன் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் என் பின்னணியில் யார் உள்ளார்கள் என கூறும் என கூறும் எடப்பாடி 5 கொலைகள் பின்னணியில் உள்ளது யார் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என மேத்யூ கேட்டுக்கொண்டார். 
 
இதனையடுத்து தற்போது முதல்வர் பழனிச்சாமி சார்ப்பில் பத்திரிக்கையாளர் மேத்யூ மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது, கொடநாடு விவகாரத்தில் மேதயூ தனது பெயரை பயன்படுத்தி தனது பெயருக்கும் பதவிக்கும் களங்கம் விளைவித்துவிட்டதாக தெரிவித்து, ரூ.1.10 கோடு மனநஷ்டம் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கை அவசர வழக்க எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.