1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (17:32 IST)

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பிய தி.மு.க செயலாளர்

கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணியினை முதற்கட்டமாக கரூர் மாவட்ட தி.மு.க  செயலாளர்  நன்னியூர் ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயல் தாக்கியதில் நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீடுகள், விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ள நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்திரவிற்கிணங்க, கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணியினை முதற்கட்டமாக துவக்கி வைத்தார்.

 
கரூர் கலைஞர் அறிவாலயத்தில் இருந்து சுமார் 6 லாரிகளில், 998 மூட்டைகள் அரிசி (25 ஆயிரம் அரிசி), 3 ஆயிரம் பெட்ஷீட்டுகள், நாப்கீன், கைலி, கொசுவர்த்தி, கோதுமை மாவு என்று சுமார் 29 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுகின்ற அ.தி.மு.க ஆட்சியில் அ.தி.மு.க கட்சியினர் கூட இன்று வரை மற்ற மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பாத நிலையில் தி.மு.க கட்சியினர் ரூ 29 லட்சம் மதிப்பிலான புயல் நிவாரண பொருட்களை அனுப்பியது இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சி.ஆனந்தகுமார்