புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (15:31 IST)

நெருங்கும் தேர்தல்; நெருக்கும் உடன் பிறப்புகள்: நகைப்பில் அதிமுக!

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவில் இருந்து 100 பேர் அதிமுகவில் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் டிசம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
இதனோடு ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் துரிதமாக தேர்தலுக்காக தயாராகி வருகிறது. 
 
உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் வேலையில் திண்டிவனத்தில் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் திமுக-வை சேர்ந்தவர்கள் அதிமுக-வில் இணைந்துள்ளனர். ஆம், திமுக தொண்டர் அணி சக்திவேல் உட்பட 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். இது திமுகவில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.