திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (11:48 IST)

அரசின் அலட்சியத்தால் தான் 17 பேர் இறந்தனர்.. ஸ்டாலின் ஆவேசம்

தமிழக அரசின் அலட்சியத்தினால் தான் 17 பேர் இறந்துள்ளனர் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில், ஆதி திராவிடர் காலணியில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த சுவர் தீண்டாமை சுவர் எனவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தலைமறைவான சுற்றுச்சுவர் வீட்டின் சொந்தக்காரர் சிவசுப்பிரமணியத்தை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், “தமிழக அரசின் அலட்சியத்தால் தான் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்துள்ளனர்” என ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் சுவர் இடிந்து விழுந்ததது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போராடியவர்களை போலீஸார் கைது செய்தது கண்டிக்கத்தக்கது எனவும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் 17 பேரின் உயிர் போயிருக்காது எனவும் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.