திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2020 (17:52 IST)

சேலம், கரூரில் மறுவாக்கு எண்ணிக்கை; திமுக மனு

சேலம் மற்றும் கரூரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் சேலம், கரூரில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.