1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (18:00 IST)

எந்த சக்தியாலும் திமுகவை அசைத்துப் பார்க்க முடியாது: அமைச்சர் சேகர்பாபு

sekar babu
எந்த சக்தியாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்து பார்க்க முடியாது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அவரது உரையின் பெரும்பகுதி திமுகவை விமர்சிப்பதில் தான் மையமாக இருந்தது.

கூடுதலாக, பாஜகவை சில இடங்களில் விமர்சித்தாலும், திமுகவை குடும்ப ஆட்சி என குற்றம்சாட்டி, திராவிடத்தை மட்டும் தனக்குச் சொந்தமாகக் கூறி அவர்களைக் கடுமையாக பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை முதலே திமுக தலைவர்கள் விஜய்யின் பேச்சுக்கு பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் சேகர் பாபுவும் தமது கருத்தைத் தெளிவாகவும் உறுதியாகவும் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

"திமுக கூடிக் கலைகின்ற மேகக் கூட்டம் இல்லை, கொள்கை சார்ந்த கூட்டம். எப்படிப்பட்ட புயல், மழை, வெள்ளம் வந்தாலும் அனைத்தையும் எதிர்த்து கடல் அலை முரணாக இருக்கின்றபோது கூட அதை நேர்த்தியாக நடத்தி செலுத்துகின்ற மாலுமி எங்கள் தமிழக முதல்வர் உள்ள வரை எந்த சக்தியாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை அசைத்துப் பார்க்க முடியாது.


Edited by Mahendran