திங்கள், 28 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (15:32 IST)

கோட் படத்துக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரை இயக்குகிறாரா வெங்கட்பிரபு?

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 455 கோடி ரூபாய் வசூலித்தது.

இந்நிலையில் படம் ஓடிடியில் வெளியான பின்னர் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் இயக்குனர் வெங்கட்பிரபுவை அழைத்து பாராட்டினார். இது சம்மந்தமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வெங்கட்பிரபு “நன்றி தலைவா!! அழைத்து GOAT படத்தைப் பாராட்டியதற்கு நன்றி. மனநிறைவாக எங்களை வாழ்த்தியதற்கு மீண்டும் நன்றி. எப்போதும் உங்கள் நன்றிக்குரியவனாக இருப்பேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் வெங்கட்பிரபு அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சமீபகாலமாக விஜய்யை இயக்கும் இயக்குனர்கள் அடுத்தடுத்து ரஜினி படத்தை இயக்க ஒப்பந்தமாகி வருகின்றனர். முருகதாஸ், நெல்சன் மற்றும் லோகேஷ் வரிசையில் இப்போது வெங்கட்பிரபுவும் இணைய உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.