செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (08:37 IST)

மாநிலக் கட்சிகள் வருவாய் –திமுக 2 ஆவது இடம் !

நாட்டிலேயே உள்ள மாநிலக் கட்சிகளில் திமுக அதிகளவில் வருவாய் ஈட்டும் கட்சிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு தொடர்பாக ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் அரசியல் கட்சிகளின் வரவு - செலவு கணக்குகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை மார்ச் 7ஆம் தேதி வெளியிட்டது. அதில் இந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகளில் அதிகளவில் வருவாய் ஈட்டும் கட்சியாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த சமாஜ்வாடிக் கட்சி உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழகத்தை சேர்ந்த திமுக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு வருமான வரித்துறை மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியவற்றிற்கு அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2017- 2018 ஆம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சி 47.19 கோடி ரூபாய் வருவாயுடன் முதலிடத்திலும் திமுக ரூ.35.748 கோடி வருவாயுடன் 2ஆவது இடத்திலும் உள்ளது.

திமுக 2017-18ஆம் ஆண்டில் ஈட்டிய வருவாயில் ரூ.27.47 கோடி செலவு செய்துள்ளதாகவும், 23.16 சதவிகிதம் செலவு செய்யப்படாமல் மீதமிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.இந்த் பட்டியலில் தமிழகத்தை ஆளும் அதிமுகவின் வருவாய் ரூ.12.726 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும், அதில் ரூ.10.53 கோடி செலவு செய்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது.