புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (15:31 IST)

ஒதுங்கிய ஜெயச்சந்திரன்… விருப்பமனு அளித்த புகழேந்தி – விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் உறுதி !

விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக உறுப்பினராக புகழேந்தி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதில் விழுப்புரம் மாவட்ட பொருளாளர் புகழேந்திக்கும், மாவட்ட துணைச்செயலாளர் ஜெயச்சந்திரனுக்கும் போட்டி நிலவியது. இந்நிலையில் இந்த போட்டியை அறிந்த மத்திய அமைச்சர் பொன்முடி இருவரையும் அழைத்து பேசியதாக தெரிகிறது.

இதையடுத்து ஜெயச்சந்திரனை சமாதானப்படுத்தியதை அடுத்து புகழேந்தி இன்று சென்னை அறிவாலயத்தில் விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அவர் திமுக சார்பில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.