புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஜூலை 2019 (10:17 IST)

ஜோசியம் பாக்கலையோ.. கிளி ஜோசியம்: திமுக-வின் வாக்கு சேகரிக்கும் ஸ்டைல்

வேலூர் மக்களவை தேர்தலையொட்டி பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக் கொண்டு நூதனமான முறைகளில் பிரச்சாரம் செய்து வருகின்றது.

வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்ட மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற இருக்கிறது. திமுக வாக்கு சேகரிப்பில் நூதனமான முறைகளை பின்பற்றி வருகிறது. நேற்று வாக்கு சேகரிக்க சென்ற ஸ்டாலின் டீசர்ட், பேண்ட் போட்டு கொண்டு மார்க்கெட் பகுதிக்கு காலையிலேயே சென்று அங்குள்ள பாமர மக்களிடம் பேசி வாக்கு சேகரித்தார். பிறகு அங்கு உள்ள சிறிய டீ கடையில் சாதாரண ஆட்களை போலவே அமர்ந்து டீ அருந்தினார். ஸ்டாலினின் இந்த ஸ்டைல் அங்குள்ள மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதுபோல வேலூர் பேர்ணாம்பட்டை பகுதியில் திமுக மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. அவருடன் வந்திருந்த மற்றொரு திமுக தொண்டரும், கிளி ஜோசியருமான ராஜேந்திரன் என்பவர் மக்களுக்கு ஜோசியம் பார்த்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.

கிளி ஜோசியம் பார்ப்பதற்காக அந்த பகுதியில் ஒரு பெரும் கூட்டமே கூடிவிட்டது. அதிமுகவுக்காக வாக்கு சேகரிக்க சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தின் மேல் நின்றபடி பேசி வாக்குகளை சேகரித்தார்.