புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஜூலை 2019 (08:38 IST)

விரைவில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை: பாஜகவின் பக்கா பிளான்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் அவர்களும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் இருந்து வரும் நிலையில் அதிமுகவில் விரைவில் ஒற்றை தலைமை ஏற்படும் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 
 
அதிமுகவில் ஒற்றைத்தலைமை ஏற்பட்டால் மட்டுமே அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடியும் என்று பாஜக மேலிடம் நினைக்கின்றதாம். மேலும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையேயான பஞ்சாயத்தை சரி செய்வதிலேயே தங்கள் காலம் ஓடி விடுகிறது என்றும், இந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுகவில் ஒற்றை தலைமையைத் தேர்வு செய்யவேண்டும் என்று பிஜேபி மேலிடம் கருதுகிறதாம் 
 
இதனை அடுத்தே சசிகலாவை விடுதலை செய்யும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சசிகலா விடுதலை ஆனால் அவரை கட்சியின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் பதவியில் அமர வைக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா அதிமுக தலைமை என்றால் ஓபிஎஸ் தானாகவே அக்கட்சியில் இருந்து வெளியே வந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. சசிகலாவின் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிச்சாமியும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது 
 
இந்த தகவல் அறிந்து பதறிப்போய் தான் ஓபிஎஸ் டெல்லிக்கு சென்று அமித்ஷா உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்ததாகவும், ஆனால் அமித்ஷா உள்பட அனைவரும் ஓபிஎஸ் இடம் பிடிகொடுக்காமல் பேசியதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் அதிமுகவில் தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறியுள்ளது தமிழக அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது