திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (12:54 IST)

புது ரூட்டில் துப்பு துலக்கும் போலீஸார்: முடிவுக்கு வருமா உமா மகேஸ்வரி வழக்கு?

உமா மகேஸ்வரி வீட்டில் கைப்பற்றப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்து போலீசார் துப்பு துலக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  
 
முன்னாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த பெண் என 3 பேரையும் மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். இதனால் நெல்லை பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.   
 
இந்நிலையில் உமா மகேஸ்வரியை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. உமா மகேஷ்வரியின் வீட்டில் சிசிடிவி இல்லை என்பதால் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். 
 
அந்த வகையில் சீனியம்மாள் என்னும் திமுக பிரமுகருக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் அதுவும் இல்லை என ஆகிவிட்டது. எனவே, போலீஸார் மறுபடியும் துப்பு தேடி வருகின்றனர்.  
அதே நேரத்தில் கொல்லப்பட்ட பணிப்பெண் மாரி, உமா மகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் அல்ல என்றும் அவரது மகள் கிருத்திகா வீட்டிற்கு வேலைகளை கவனித்து வந்தவர் என்றும் கூறப்படுகின்றது.  
 
உமா மகேஸ்வரியின் வீட்டு வேலைக்காரி சம்பவ தினத்தில் இருந்து மாயமாகி விட்டதாக கூறப்படுகின்றது. அது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் தற்போது சமபவ இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்து போலீசார் துப்பு துலக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  
 
ஆம், உமா மகேஸ்வரி, முருக சங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோரின் செல்போன்களில் வந்த அழைப்புகளை போலீசார்  ஆய்வு செய்து வருகின்றனர்.