புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 செப்டம்பர் 2018 (18:43 IST)

எதிர்க்கட்சியாக இருக்கும்போதே தொடரும் அராஜகம்: திமுகவை விளாசும் நெட்டிசன்கள்

ஒருபக்கம் அதிமுக அரசின் ஊழல்கள் குறித்த செய்திகள் ஊடகங்களில் இடம்பெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் திமுகவினர்கள் செய்யும் அராஜகங்கள் குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சென்னை ஓட்டல் ஒன்றில் பிரியாணி கேட்டு திமுக பிரமுகர் யுவராஜ்சிங் என்பவர் செய்த அடிதடியினால் ஓட்டல் முதலாளி மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஓட்டல் முதலாளியை சந்தித்து வருத்தம் தெரிவித்ததோடு, யுவராஜ்சிங் மீதும் நடவடிக்கை எடுத்தார்

அதனையடுத்து திமுக வழக்கறிஞர் ஒருவர் ஓசி புரோட்டா கேட்டு இன்னொரு ஓட்டல் ஒன்றின் முதலாளியை அரிவாளாள் காட்டி மிரட்டியதாக செய்தி வெளிவந்தது.

இதனையடுத்து செல்போன் கடை உரிமையாளரை தாக்கி திமுக நிர்வாகி ஒருவர் மண்டையை உடைத்த செய்தியும், திமுக எம்.எல்.ஏ ஒருவர் காவல்துறை அதிகாரியை பட்டப்பகலில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் தற்போது அழகு நிலையத்தில் புகுந்து பெண் ஒருவரை சரமாரியாக திமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

திமுக கடந்த 7 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாகத்தான் உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இந்த அராஜகம் என்றால் ஆளுங்கட்சி ஆனால் என்ன ஆவது? என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.