1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. I dont answer to PUN RS Bharathi says velumani

பியூன் வேலை பார்க்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் சொல்ல முடியாது: அமைச்சர் வேலுமணி

அமைச்சர் வேலுமணி
கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் வேலுமணி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு குறித்த செய்தியும், அதற்கு வேலுமணி விடுத்த சவாலும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திமுக தலைவர் பதவியை அழகிரிக்கு அளித்தால் தான் அமைச்சர் பதவியை துறக்க தயார் என்றும், தன்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் ஆனால் அரசியலைவிட்டு விலகவும் தயார் என்றும் அமைச்சர் வேலுமணி கூறினார்

இந்த நிலையில் உள்ளாட்சி துறை ஊழல் குறித்து தன்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய அமைச்சர் வேலுமணி தயாரா என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சவால் விட அதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, 'பியூன் வேலை பார்க்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும், அவர் மு.க.ஸ்டாலின் சொல்லும் வேலைக்கு பெட்டிசன் கொடுக்கும் பியூன் வேலை பார்ப்பவர் என்றும் அமைச்சர் வேலுமணி கூறினார். மேலும் ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் சொல்ல எங்கள் கட்சியில் கீழ்மட்டத்தில் அதிகம் பேர் இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.
அடுத்த கட்டுரையில்
ஜியோவின் அட்டகாசமான ஆஃபர்.