வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 செப்டம்பர் 2018 (10:09 IST)

கலைஞருக்கு முதலில் சிலை வைக்கப்போவது யார்? : ஸ்டாலின் - அழகிரி போட்டி

சென்னை அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை நிறுவ ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் மதுரையில் கருணாநிதியின் சிலையை நிறுவ அழகிரி முயற்சி செய்து வருகிறார்.

 
திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அழகிரி சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் பேரணியும் நடத்தினார். மேலும், திமுக மற்றும் ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ந்து அவர் பேட்டிகளில் கருத்து தெரிவித்து வருகிறார். தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ளவில்லை எனில், வரும் தேர்தல்களில் திமுக 4ம் இடத்திற்கு தள்ளப்படும் எனவும் கூறி வருகிறார்.
 
இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் எட்டு அடி வெண்கல சிலையை அறிவாலயத்தில் நிறுவ ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். சமீபத்தில் கூட அந்த சிலை வடிவமைப்பு வேலைகளை பார்வையிட்டார். அதே நேரம், கருணாநிதிக்கு மதுரையில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் வெண்கல சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மு.க.அழகிரி மதுரை மாவட்ட ஆட்சி தலைவரிடம் அனுமதி கேட்டுள்ளார். அவருக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

 
ஆனாலும், சிலை செய்யும் பணிகளை அவர் முடுக்கி விட்டுள்ளார். எனவே, தந்தைக்கு முதலில் யார் சிலை வைக்கப்போகிறார்கள் என்பதில் ஸ்டாலின் - அழகிரிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது என திமுக தரப்பில் பேசப்படுகிறது.