திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 செப்டம்பர் 2018 (10:59 IST)

அழகு நிலையத்தில் பெண்ணை கடுமையாக தாக்கிய திமுக பிரமுகர் - வெளியான வீடியோ

அழகு நிலையத்தில் ஒரு பெண்ணின் மீது திமுக மாவட்ட முன்னாள் கவுன்சிலர் சராமரி தாக்குதல் நடத்திய சம்பவம் வீடியோவாக வெளியாக அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யா. இவர் வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அந்த அழகு நிலையத்தில் புகுந்த பெரம்பலூர் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் சத்யாவை சராமரியாக அடித்து உதைத்தார். கீழே விழுந்த சத்யாவை அவரது வயிறு மற்றும் முதுகில் தனது காலால் எட்டி எட்டி உதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
 
வலி தாங்க முடியாமல் சத்யா கதறுகிறார். ஆனாலும், பெண் என்றும் பாராமல் ஈவு இரக்க மின்றி மீண்டும் மீண்டும் அவரை செல்வகுமார் எட்டி எட்டி உதைக்கிறார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து செல்வகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். 
 
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சத்யாவை செல்வகுமார் தாக்கியிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே பிரியாணிக்காக யுவராஜ் என்பவர் பாக்சிங்கில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது திமுக கவுன்சிலர் ஒரு பெண்ணை அடித்து உதைத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.