1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (11:43 IST)

அமைச்சரின் தலை துண்டிக்கப்படும்: மிரட்டல் விடுத்த திமுக தொண்டர் கைது!

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் தலை துண்டிக்கப்படும் என திமுக தொண்டர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் விலக வேண்டுமென முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் இது ஒரு பிரச்சினை ஒன்றின் காரணமாக தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குறித்து திமுக தொண்டர் ஒருவர் தனது முகநூலில் அவதூறாக பேசி இருந்தார்
 
 அதில் சாதி வெறிபிடித்த எம்ஆர்கே அவர்களின் தலை துண்டிக்கப்படும் என்றும் எம்ஆர்கே ஆட்டம் அழிவின் ஆரம்பம் என்றும் பதிவு செய்திருந்தார் 
 
இதனை அடுத்து இந்த பதிவு செய்த முரளி கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.