புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2019 (19:16 IST)

திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் திடீர் வாபஸ்: கவர்னர்-ஸ்டாலின் சந்திப்பு எதிரொலியா?

ஒரே நாடு ஒரே மொழி’ என சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப உள்ளதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமித்ஷாவுக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனை அடுத்து வரும் 20ஆம் தேதி இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் சமீபத்தில் கூடிய திமுக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது 
 
 
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் ’எனது பேச்சை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும், நானும் இந்தி பேசாத மாநில தெரிந்தே வந்திருக்கின்றேன் என்றும், நான் எப்போதும் சொல்வது போல இந்திய மொழிகளை வலிமைப்படுத்த வேண்டும் என்றும் தனது தாய்மொழியில் படிக்கும்போதுதான் ஒரு குழந்தை நன்றாக படிக்க முடியும் என்றும், நான் அனைத்து இந்திய மொழிகளையும் ஆதரிக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் 
 
 
மேலும் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்திக்க வேண்டும் என கவர்னர் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பில் எந்த சூழலிலும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படாது என்றும் அமிர்ஷா சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் ஸ்டாலினிடம் ஆளுநர் விலக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கவர்னரின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட திமுக, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது