திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஜனவரி 2022 (10:58 IST)

ஐந்து கேட்கும் காங்கிரசுக்கு ஒன்று கூட ஒதுக்க முன்வராத திமுக: கூட்டணி உடையுமா?

பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 22 மாநகராட்சிகளில் 5 மாநகராட்சி தங்களுக்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்பதாகவும் ஆனால் ஒன்றைக் கூட ஒதுக்க திமுக முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது 
 
22 மாநகராட்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று திமுக உறுதி செய்துள்ளதாகவும் வேண்டுமானால் நான்கு அல்லது ஐந்து துணை மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு தர திமுக முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஆனால் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளை வாங்க வேண்டும் என்று தீவிரமாக உள்ளதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
ஒரு மேயர் தகுதி கூட காங்கிரசுக்கு ஒதுக்க வில்லை என்றால் ஒரு சில இடங்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.