புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (13:01 IST)

எத்தனை ஏரியாவில் எத்தனை சீட்டு..? – அதிமுக – பாஜக பேச்சுவார்த்தை!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இடபங்கீடு குறித்து அதிமுக – பாஜக இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் தற்போது அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். 10 முதல் 12 சதவீத இடங்கள் பாஜகவிற்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.