1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. AIADMK Creative Opposition - BJP Leader Annamalai

அதிமுக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி - பாஜக தலைவர் அண்ணாமலை

AIADMK Creative Opposition
அதிமுக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது என பாஜக தலைவர்  கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. தொடர்ந்து 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்த இந்த கூட்டணி தற்போதைய நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் சமீபத்தில்  ”சட்டமன்றத்தில் ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவினரை பார்க்க முடியவில்லை” என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சியினரையே பாஜக விமர்சித்துள்ளது பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியது.  இதை மறுத்து பாஜக தலைவர்  கே. அண்ணாமலை  இன்று  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  குயூட்டனி குறித்து  ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.
 
அதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடபங்கீடு  குறித்து பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அதிமுக ஆக்கபூர்வமான எதிர்க்கடசியாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்
இரவு நேர ஊரடங்கு ரத்து, பள்ளிகள் திறக்க அனுமதி -கர்நாடக அரசு