திமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்து கொண்டு செயல்பட்டு வருகிறது -சிவி சண்முகம் பேச்சு.....
அதிமுகவின் 53 வது துவக்க ஆண்டினை முன்னிட்டு விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியினை ஏற்றி வைத்து கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள்வேஷ்டி, சேலை, சட்டை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த சிவி சண்முகம்........
அதிமுக சீறும் சிறப்புமாக உள்ளதால் 2026 ல் மிகப்பெரிய வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சூளுரைப்பதாகவும், ஜால்ரா அடிக்கும் அரசு தமிழகத்தில் நடைபெற்று கொண்டுருப்பதாகவும்
திராவிட மாடல் அரசு என்று சொல்லிகொண்டு
பன்டாரம் பரதேசி என்று சொன்னவர்களுடன் பன்டாரம் பரதேசியாக மாறி ஜால்ரா அடிக்கும் அரசு தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எப்பொழுது பிரதம மந்திரியை பார்த்து கும்மிடு போட்டாரோ அன்றையிலிருந்து தமிழக ஆளுநர் தனது சுதியை மாற்றிகொண்டு குற்றம் குறை கண்டு பிடித்து கொண்டிருந்த ஆளுநர் தமிழக அரசை வானளவு உயர்த்தி பேசி கொண்டிருப்பதாகவும் இன்று திமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்து கொண்டு செயல்பட்டு கொண்டிருப்பதால் விரைவில் அந்த காட்சியை பார்க்கலாம் என தெரிவித்தார்.