திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (09:55 IST)

வானிலை அறிவித்தபடி மழை பெய்திருந்தால் திமுக தள்ளாடி இருக்கும்-எம் எல் ஏ ராஜன் செல்லப்பா!

அதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே கட்சி கொடியேற்றி, அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.
 
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்:
 
மீண்டும் கட்சியை ஒருங்கிணைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு:
 
கட்சியை வளர்க்க நான் உழைக்க தயாராக இருக்கிறேன் எந்த நடவடிக்கையும் என் தன்னை வருத்திக்கொண்டு சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று தான் எடப்பாடியார் அறிக்கை விட்டார். குறுகிய மனநலத்தோடு வருபவர்களை அடையாளம் காண்கிறார். இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும் என நினைக்கிறவர்களையோ, அதற்கு உறுதுணையாக இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை தொண்டர்களும் அடையாளம் காண வேண்டும் என தான் எந்த தியாகத்தையும் செய்ய தயார் எனக் கூறினார்.
 
நேற்று வெள்ளம் தேங்காமல் இருந்தது தான் வெள்ளை அறிக்கை என உதயநிதி கூறியது குறித்த கேள்விக்கு:
 
வெள்ளமே வரவில்லை, ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை. அதற்கான ஏற்பாடாக என்ன செய்தீர்கள் என்று தான் வெள்ளையறிக்கையை கேட்டார். வானிலை அறிவித்தபடி மழை பெய்திருந்தால் திமுக தள்ளாடி இருக்கும். வெள்ளத்தை வைத்து சிலர் வணிகம் செய்வது உண்டு அதை யாரும் செய்து விடக்கூடாது. ஒரு நாள் மழைக்கு சென்னை இவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் குழாய் திட்டம் அதிமுக கொண்டு வந்தது. அதை முடிக்காமல் இருக்கிறார்கள். 4000 கோடி செலவு எனக் கூறியுள்ளார்கள் எவ்வளவு பணம் உண்மையில் செலவாகி உள்ளது என தெரிவிக்க தான் வெள்ளை அறிக்கை கேட்கிறோம். மதுரை ஆதீனம் சொன்னதைப் போல இது மழைக்கான மாதம் அல்ல. கொஞ்சம் திருந்தி விட்டதாக சொல்கிறார்கள் எவ்வளவு திருந்தி உள்ளார்கள் என மழை வரும்போது திறந்து விடும்.
 
கிரிவலப் பாதையில் கடைகள் அகற்றப்பட்டது குறித்த கேள்விக்கு:
 
அதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதை மறுக்க முடியாது. முன்னதாகவே நோட்டீஸ் கொடுத்து முறையான நடவடிக்கைகளை பின்பற்றி இருக்க வேண்டும். அவர்களின் ஜீவாதாரண உரிமை பாதிக்கப்படுகிறது அதற்கு மாற்று வழி சொல்லி இருக்க வேண்டும். அதிகாரிகள் சில நேரம் அவசரப்பட்டு செய்வது வருத்தத்திற்குரிய விஷயம் தான். ஆனால் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் செய்தால் தவறு இல்லை.
 
எடப்பாடி சமூக நீதி குறித்து வீண் பழி சுமத்துவதாக முதல்வர் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு:
 
சமூக நீதியை அவர்களுக்கு ஏத்தது போல வளைத்துக் கொள்கிறார்கள். சமூக நீதியை சரியாக கடைபிடித்தவர் எடப்பாடியார் தான். ஆனால் இவர்கள் சமூக நீதி என்ற போர்வையில் பல சமுதாயத்தை இழிவு படுத்துகிறார்கள். சனாதனத்தை பற்றி முழுமையாக எப்படி சொல்லாமல் உள்ளார்களோ அதைப்போலத்தான் சமூகநீதி பற்றி அவர்களுக்கு உரிய பாணியில் சொல்கிறார்கள். யார் இதை முழுமையாக பின்பற்றுகிறார்கள் என்பதற்கான காலகட்டம் நிச்சயம் வரும்.
 
விமானநிலைய விரிவாக்கம் குறித்த கேள்விக்கு:
 
விரிவாக்கத்திற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது. விமான போக்குவரத்து கழகம் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிலம் கையகப்படுத்தப்பட்டு முடித்து விட்டது என மாவட்ட ஆட்சியர் சொல்லியுள்ளார். 24 மணி நேர சேவைக்கான விமான நிறுவனங்கள் இரவு நேரத்தில் வருவதற்கான ஒப்புதலை இன்னும் அளிக்கவில்லை, விரைவில் அறிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.
 
ரோப் கார் பணிகள்  குறித்த கேள்விக்கு:
 
அதற்கான நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் சொல்லி இருக்கிறார்கள். அதை விரைவுப்படுத்துவதற்கு அதிகாரிகளிடம் கோரிக்கை வைப்போம் நிச்சயம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் கார் திட்டம் மட்டுமல்ல திருக்கோவில் உள்ள மற்ற ஊர்களில் முன்னேற்ற பணிகள் நடைபெறுகிறது திருப்பரங்குன்றத்தில் மட்டும் இன்னும் சீர்படுத்த வேண்டும். வருடத்திற்கு பிறகு அதிமுக ஆட்சியின் போது இன்னும் அதிகமான திட்டங்களை கொண்டு வந்து பழனியை போல் முன்னேற்றுவோம் என கூறினார்.