செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 மார்ச் 2021 (19:54 IST)

இதுவரை திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிலவரம்!

திமுக கூட்டணி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கூட்டணி தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது
 
இதுவரை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது
 
இன்னும் காங்கிரஸ் மதிமுக மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் என்று முடிவாகி விட்டதாகவும் விரைவில் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.