திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (11:44 IST)

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கூல் லிப் புகையிலை! சாப்பிட்ட குழந்தை மருத்துவமனையில்..!

Cool Lip
கோவையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கூல் லிப் புகையிலை கிடந்த நிலையில் சாப்பிட்ட குழந்தை உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவர் பிரபல உணவகம் ஒன்றில் ஆன்லைன் மூலம் தயிர் சாதம், சாம்பார் சாதம் மற்றும் பேபி கார்ன் ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட உணவை குழந்தைக்கு அவர் ஊட்டி விட்டபோது அதில் டீத்தூள் பொட்டலம் போல ஏதோ தட்டுப்பட்டுள்ளது. அதை எடுத்து பார்த்தபோது அது கூல் லிப் எனப்படும் புகையிலை பொருள் என தெரியவந்தது.

அதேசமயம் குழந்தைக்கு வாந்தி கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உணவு கடைக்கு போன் செய்தபோது அவர்கள் எடுக்கவில்லை என ஜாஸ்மின் குற்றம் சாட்டிய நிலையில் உணவு பாதுகாப்பு துறையினர் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டதுடன், நோட்டீஸும் அனுப்பியுள்ளனர்.

நோட்டீஸுக்கு உணவகம் உரிய பதிலை அனுப்பிய பின் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K