திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 15 நவம்பர் 2023 (20:06 IST)

செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் கைது செய்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று அவர் காணொளி மூலம் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது நவம்பர் 22 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் காவல் நீடிப்பு என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.

எனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் பத்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரை புகழ் சிறையில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது ஓமந்தூரார் பன்னோக்கி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது மூளைக்குச் செல்லும் நரம்பில் வலி ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.