வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (20:35 IST)

செந்தில் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ் ஆகிறாரா? மருத்துவமனை தகவல்

senthil balaji
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகிறது.

கடந்த சில மாதங்களாக புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனை அடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள்  அவருக்கு தேவைப்பட்டால் மீண்டும் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்

காலில் உள்ள நரம்பை எடுத்து அறுவை சிகிச்சை செய்ததால் அவருக்கு அடிக்கடி கால் மரத்து போவதாகவும் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். 

இதய சிகிச்சை பிரிவு துறை தலைவர் மனோகரன் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜி டிஸசார்ஜ் செய்யப்படுவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நாளையும் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ள உள்ளதால் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை என ஓமந்தூரார் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.