செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (10:07 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சை: எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட உள்ளதாக தகவல்..!

senthil balaji
சென்னை ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து அதிகமாக இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வயிற்றுப்புண் மற்றும் குடல்புண் காரணமாக சிறப்பு குழுவினர் காலையிலேயே சிகிச்சையை தொடங்கி உள்ளதாகவும், அனைத்து பரிசோதனை முடிவுகளும் கிடைத்த பிறகு சிகிச்சையை தொடர்வதா என்பதை மருத்துவக் குழு முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

மேலும் உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பு இரத்த பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை முடிந்த பின்னர் அவர் குணமான பின் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார் என்றும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran