1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 3 மே 2021 (07:54 IST)

டெபாசிட் இழந்தார் பிரேமலதா: அரசியல் வியாபாரிக்கு மக்கள் கொடுத்த சவுக்கடி!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முடிவுகள் நேற்று காலை முதல் வெளிவரத் தொடங்கிய நிலையில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் முதலில் பேச்சுவார்த்தை நடத்திய விஜயகாந்தின் தேமுதிக, அதன்பின் அந்த கூட்டணியில் இடம் கிடைக்காமல் அனைத்து கூட்டணியும் ஒதுக்கப்பட்ட நிலையில் கடைசியில் வேறு வழியில்லாமல் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியுடன் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிட்டது 
 
இதில் தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் பிரேமலதா அந்த தொகுதியில் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் பிரேமலதா டெபாசிட் இழந்துள்ளார். விருத்தாச்சலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார் என்பதும், இந்த தொகுதியில் பாமக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எந்த கூட்டணியில் இணைந்தால் அதிக தொகுதிகள் கிடைக்கும், எந்த கூட்டணியில் இணைந்தால் அதிக பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கூட்டணி வைத்துக் கொண்டிருந்த அரசியல் வியாபாரியான தேமுதிகவுக்கு மக்கள் சரியான சவுக்கடி கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.