வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2019 (15:28 IST)

4+1? இல்ல 5+1? தேமுதிக - அதிமுகவுடன் கைகோர்ப்பதில் லைட்டா சிக்கல்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்த கூட்டணி உறுதிப்படுத்துதளை தேமுதிகதான் தாமதப்படுத்தி வருகிறது. 
 
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் பாமகவுக்கு 7 தொகுதிககளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு கூடுதலாக ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் பாஜக சார்பில் விஜயகாந்துடன் பேச்சு வார்த்தை நடத்திய போது தேமுதிக 7 தொகுதிகளை கேட்டதாக் தெரிகிறது. ஆனால், அதிமுக இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 
 
இதை பயன்படுத்திக்கொண்டு திமுக தேமுதிகவை தன் பக்கம் இழுக்க முயற்சிகளை மேற்கொண்டது. திமுக 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என கூறியதல், தேமுதிக இதற்கு ஒப்புக்கொள்ளாததால் திமுகவின் கூட்டணி கதவு மூடப்பட்டது. 
ஆனால், பாஜக தேமுதிகவை கவிட விரும்பாததால் அதிமுக - தேமுதிக கூட்டணி நிச்சயம் சாத்தியமானதுதான் என கூறப்படுகிறது. இதனையடுத்து தேமுதிகவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட் கட்டாயம் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. 
 
ஆனால், 4 தொகுதிகளை வழங்குமா அல்லது 5 தொகுதிகளை வழங்குமா என்பதில்தான் சிக்கல் என கூறப்படுகிறது. 5 தொகுதிகள் வழங்கப்படும் என பெருவாரியான தகவல்கள் கூறும் நிலையில் நிச்சயம் தேமுதிக கேட்ட 7 தொகுதிகள் வழங்கப்படாது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
 
தொகுதி பங்கீடு குறித்து நாளை தெரியவரும் என செய்திகள் தெரிவிக்கப்படும் நிலையில், நாளை வரை காத்திருப்போம்...