1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 மே 2018 (08:45 IST)

திவாகரனுடன் மோதல் எதிரொலி: சசிகலாவை சந்திக்கின்றார் தினகரன்

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி மீது ஏற்கனவே அவரது ஆதரவாளர்களே அதிருப்தியில் இருக்கும் நிலையில் தற்போது திவாகரனும் அவரது மகன் ஜெய் ஆனந்தும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தன்னுடைய கட்சிக்கு தனது உறவினர்களே எதிர்ப்பு தெரிவித்திருப்பது தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சசிகலாவை சந்திக்க தினகரன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
நாளை மறுநாள் பெங்களூர் சென்று சசிகலாவை சந்திக்க தினகரன் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த சந்திப்புக்கு பின்னர் தினகரன் ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுக்கவுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்த முடிவு என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அதிமுக, திவாகரன் அணி, மட்டுமின்றி திமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆவலுடன் இருப்பதாக தெரிகிறது. தினகரன் மற்றும் சசிகலா சந்திப்பு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்