1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 30 ஏப்ரல் 2018 (18:12 IST)

ஜெ. மரணம்: திவாகரனுக்கு சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் மே3ஆம் தேதி ஆஜராக திவாகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

 
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. சசிகலா குடும்பத்தினர், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தற்போது சசிகலா சகோதரர் திவாகரனை மே 3ஆம் தேதி ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மறைந்த ஜெயலலிதா குறித்த மருத்துவ விவரங்களை ஆய்வு செய்ய மருத்துவக்குழு ஒன்றை அரசிடம் ஆணையம் கேட்டிருந்தது. இதற்கு மருத்துவ குழுவை ஆணையமே அமைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
 
ஜெயலலிதாவின் மருத்துவ ஆவணங்களை சரிபார்க்க விரைவில் ஆய்வுக்குழு அமைக்கப்படும் என  ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.