1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (17:05 IST)

அழையா விருந்தாளியாக சென்று வாய்கிழிய பேசிய ரஜினி?

குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவிற்கு ரஜினி அழையா விருந்தாளியாக சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் ரஜினகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு காஷ்மீர் குறித்த்து பாஜக அரசு எடுத்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்தார். 
இந்நிலையில், சமூக வலைதளங்களில் இந்த விழாவிற்கான அழைப்பிதழில் நடிகர் ரஜினி காந்த் பெயர் இடம் பெறவில்லை. சிறப்பு விருந்தினர்கள் பெயர் பட்டியலில் வேளாண்மை விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன், முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே. பராசரன், அப்போலோ மருத்துவமனை சேர்மன் டாக்டர். பி.சி. ரெட்டி, துக்ளக் ஆசிரியர் சுவாமி நாதன் குருமூர்த்தி, விஐடி பல்கலைக்கழக நிறுவனர் ஜி. விஸ்வநாதன் ஆகியோர் பெயர் மட்டுமே உள்ளது. 
 
எனவே ரஜினிகாந்த் அழைக்காமலேயே விழாவில் பங்கேற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் சில விமர்சனங்கள் சற்று கடுமையான ஒன்றாகவும் உள்ளது.