பாரதிராஜா-ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

Last Modified திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (21:14 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று அமித்ஷா கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசியதன் தாக்கமே இன்னும் தமிழகத்தில் நீங்கவில்லை. ரஜினியின் பேச்சுக்கு சீமான் உள்பட பலர் கருத்து தெரிவித்து தங்களை விளம்பரம் செய்து கொண்டுவிட்டனர். இருப்பினும் ரஜினி யாருக்கும் வழக்கம்போல் பதிலளிக்காமல் தன் வேலையை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினியை சமீபத்தில் அதிகம் விமர்சித்தவர்களில் ஒருவரான இயக்குனர் இமயம் பாரதிராஜா இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பிரபல கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களுக்கு நடத்தப்படவுள்ள பாராட்டு விழா குறித்து ஆலோசிக்கவே நடந்ததாகவும் கூறப்படுகிறது

ரஜினி சின்ன சின்ன கேரக்டர்களிலும் வில்லன் கேரக்டர்களிலும் நடித்து வந்த நிலையில் அவரை முதல்முறையாக 'பைரவி' படத்தில் ஹீரோவாக்கியவர் கலைஞானம். அதற்கு நன்றிக்கடனாக ரஜினிகாந்த் நடித்த 'அருணாச்சலம்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக கலைஞானம் இணைத்து கொள்ளப்பட்டார்.

இந்த நிலையில் திரையுலகிற்கு கலைஞானம் செய்த சேவையை பாராட்டி அவருக்கு ஒரு விழா நடத்த திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டு கலைஞானத்திற்கு புகழாராம் சூட்டவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :