திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 26 மே 2021 (08:20 IST)

பிரபல இயக்குனர் சகோதரர் உயிரிழப்பு: கொரோனாவுக்கு மேலும் ஒரு பலி!

பிரபல இயக்குனர் சகோதரர் உயிரிழப்பு: கொரோனாவுக்கு மேலும் ஒரு பலி!
பிரபல இயக்குனர் ராஜுமுருகன் அவர்களின் சகோதரரும் ஊடகவியலாளருமான குமரகுருபரன் என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
புதிய தலைமுறை, நியூஸ் 18 உள்பட பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர் குமரகுருபரன். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் பிரபல இயக்குனர் ராஜுமுருகன் அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரகுருபரன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறை மற்றும் பத்திரிகை துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து குமரகுருபரன் குடும்பத்திற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.