செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (21:06 IST)

சென்னை காவல்துறையினர்களுக்காக பிரத்யேக கொரோனா வார்டு!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது என்பதும் இந்த கொரோனா அப்பாவி மக்களை மட்டுமின்றி காவல் துறையினரையும் பாதித்து சிலரை உயிர் பலி வாங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு பிரத்யேகமாக கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆக்கத்தின் கீழ் சென்னை எழும்பூரில் தற்போது பயன்பாட்டில் இருந்துவரும் காவலர் மருத்துவமனை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் உதவியுடன் நாளைய தேதி அதாவது மே 26 முதல் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்படுகிறது
 
இதில் 75 நபர்களுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் மிதமான கொரோனா தொற்று உள்ளவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது