செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 பிப்ரவரி 2019 (22:20 IST)

புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் தமிழ் இயக்குனர்: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா?

தமிழகத்தில் நான்கு போராட்டங்களில் கலந்து கொண்டு இரண்டு முறை சிறை சென்றுவிட்டால் போதும் அவர் உடனே அரசியல் கட்சி தொடங்கி ஒரு தலைவராகிவிடுவார். சில ஆண்டுகாலம் அரசியலில் தாக்குப்பிடித்துவிட்டால் பின்னர் இரு கழகங்களும் கூட்டணிக்கு அழைக்கும். இந்த ஃபார்முலா பலருக்கு ஒர்க் அவுட் ஆகிவருவதால் பலரும் துணிச்சலுடன் அரசியல் கட்சியை ஆரம்பிக்கின்றனர்.
 
அந்த வகையில் தமிழை வைத்து வியாபாரமும் விளம்பரமும் தேடி வருபவர்களில் ஒருவர் இயக்குனர் கவுதமன். அரசு என்ன திட்டம் அறிவித்தாலும் அதனை எதிர்க்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட இவர் புதியதாக ஒரு அரசியல் கட்சியை நாளை தொடங்கவுள்ளாராம். கட்சி, கொடி, சின்னம் மற்றும் கொள்கைகளையும் நாளை அறிவிக்கவுள்ளாராம். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இவரது கட்சி போட்டியிடும் என தெரிகிறது
 
தமிழும், தமிழ்க்கலாச்சாரமும் அழிந்து வருவதாகவும் அதனை மீட்டு எடுக்கவே கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார், சினிமாவிலேயே சாதிக்காத இவர் அரசியலில் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.