செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (21:10 IST)

பூஜா தேவரியா சென்னை போலீஸ் கமிஷனர் ஆபிஸில் பரபரப்பு புகார்

சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் போனை ஹேக் செய்து அவருடைய அந்தரங்க புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டு ஹேக்கர்கள் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இப்போது நடிகை பூஜா தேவரியாவின் ஸ்மார்ட் போனை ஹேக் செய்துள்ளார்கள்.
இதை பற்றி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பூஜா தேவரியா வெளியிட்ட பதிவில், என்னுடைய செல்போனை சிலர் ஹேக் செஞ்சு, என்னுடைய வாட்ஸ் அப்பில் உள்ள நண்பர்கள் மற்றும் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு மெசேஜ் அனுப்பிட்டு வர்றாங்க என்று  கூறியுள்ளார். 
மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதுபற்றி பூஜா தேவரியா புகார் அளித்துள்ளார். தமிழில் ஆண்டவன் கட்டளை,  இறைவி, குற்றமே தண்டனை உள்ளிட்ட பல படங்களில் பூஜா நடித்துள்ளார்.