ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (21:10 IST)

அனுஷ்கா பட இயக்குநர் தீடீர் மரணம்... அதிர்ச்சியில் திரை உலகம்...

பிரபல இயக்குநரும், எழுத்தாளருமான கோடி ராமகிருஷ்ணா உடல் நலக்குறைவால் திடீரென்று மரணமடைந்தார்.
டோலிவுட் என்று அழைக்கப்படுக்கிற  தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான  கோடி ராமகிருஷ்ணா , சுமார் 100 க்கும் மேற்பட்ட படங்களை இயக்க்கியதாக தெரிகிறது. 
 
மேலும் டாக்டர் ராஜசேகர் நடிப்பில் இவர் இயக்கிய இதுதாண்டா போலீஸ், விஜய சாந்தி ஐபிஎஸ், ஆகிய படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன.
 
சில வருடங்களுக்கு முன்னர் நடிகை அனுஷ்கா நடிப்பில் இவர் இயக்கிய அருந்ததி படமும் தமிழ், ஹிந்தியில் பிரமாண்ட வெற்றி பெற்றன.
இந்நிலையில் சமீபகாலமாகவே நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த கோடி ராமகிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். 
 
இந்நிலையில் இன்று திடீரென்று அவர் மரணமடைந்து விட்டார். கோடி ராமகிருஷ்ணாவின் மறைவால் தமிழ் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.